Saturday, August 24, 2013
நிறுவுனர் அமரர் குமரையா முத்துக்குமாரு நினைவுப் பேருரை.
பிள்ளைகளின் கல்வி விருத்திக்கான குடும்ப தலைமைத்துவம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பாடசாலையின் தலைவர் அவர்களேää இன்றைய பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பெருமைக்குரிய பிரதம விருந்தினர் அவர்களேää மற்றும் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் மதிப்பிற்குரியவர்களேää அறிவையும் ஒழுக்கத்தையும் இரண்டறக் கலந்து தனது பண்பு சார்ந்த நடத்தைகளால் எதிர்கால தலைவர்களை உருவாக்கிட தம்மை அர்ப்பணித்து உழைக்கும் ஆசிரிய மணிகளேää பாடசாலை அபிவிருத்தி சங்கத்தவர்களேää அன்புக்குரிய பெற்றோர்களேää உறுதிப்பாடு மிக்க மாணவர்களேää கல்வியியலாளர்களேää பாடசாலையின் கல்விசாரா உத்தியோகத்தர்களேää நலன்விரும்பிகளே உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள் உரித்தாகட்டும்.
54 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட மன்னார் மாவட்டத்திலும்ää தேசிய மட்டத்திலும்ää சர்வதேச மட்டத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் நின்று நிறுவுனர் நினைவுப் பேருரையை சமர்ப்பிப்பதில் பெருமை அடைகின்றேன். அத்துடன் சித்தி விநாயகர் கல்லூரியின் வரலாற்றுப் பின்புலம்ää அதன் அபிவிருத்திப் போக்குää அதன் கல்விசார் பெறுமதி என்பவற்றிற்கு அடித்தளம் இட்ட நிறுவுனர் அமரர் குமரையா முத்துக்குமாரு அவர்களின் சிந்தனையில் எழுந்த பிரதிபலிப்புக்களை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன்னார் மாவட்டத்தின் தனித்துவமிக்க சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி 14.05.1959 இல் ஸ்தாபிக்கப்பட்டு 01.01.1961 இல் அரச பாடசாலையாக மாற்றப்பட்டது.
சைவ மரபின் ஒரு வளர்ச்சியாக அமைந்த உப்புக்குளம் பிரதேசத்தில் திருவானைக்கூடம் என்ற பெயரில் கட்டப்பட்;ட ஒரு பலநோக்கு கருத்திட்டத்தின் ஒரு மையப்பகுதியாக சித்தி விநாயகர் ஆலயத்தினையும்ää சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியையும் 10 ஏக்கர் பிரதேசத்தில் அமரர் குமரையா முத்துக்குமாரு நிறுவினார். ஆகவே சைவ மரபை ஒட்டி ஆன்மீகமும்ää ஆலய வழிபாடும் இணைந்த ஒரு பண்பாட்டில் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் முளைவிடத் தொடங்கின எனலாம்.
எமது நாட்டில் உருவாக்கி பல சவால்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட சைவ பாரம்பரியம் மிக்க பாடசாலைகளில் இன்றும் என்றும் தனித்துவம் மிக்கதாக மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி திகழ்கிறது என்பது மிகையான கூற்றல்ல.
சைவப் பாரம்பரியம் மிக்க சமூக மேனிலை பெற்ற கல்வியியலாளர்களான சிவமணி.சேர்.கந்தையா வைத்தியநாதன்ää திரு.துரையப்பாää திரு.வைத்தியலிங்கம்ää திரு.மூ.சின்னத்தம்பிää திரு.ரகுநாதன்ää திரு.மூ.வைத்தியலிங்கம்ää திரு.மா.கந்தசாமிää திரு.பரமகுருää திரு.க.பத்மநாதன்ää னுச.ந.சுப்பிரமணியம்ää திருமதி.மங்களேஸ்வரி ஆகிய பல முன்னோடிகளால் கட்டிக் காத்து வளர்க்கப்பட்ட இக் கல்லூரி இதன் முதல் அதிபராக திரு.சääவீரசிங்கம் அவர்களையும்ää இன்றைய அதிபராக திரு.யு.ஐ.தயானந்தராஜா அவர்களையும் கொண்டுள்ளது.
சிறந்த தொழில்சார் நிபுணத்துவமும்ää சைவப் பாரம்பரியத்தின் மீதான தீவிர பற்றுணர்வும் மாணவ ஒழுக்கத்தின் மீது மூடாத விழி கொண்டவராகவும்ää நவீன கல்விச் சிந்தனைகளை சைய பாரம்பரியத்தோடு உள்வாங்கும் துணிவும் கொண்ட இன்றைய அதிபர் திரு.யு.ஐ.தயானந்தராஜாää அமரர்.குமரையா முத்துக்குமாரு அவர்களின் சிந்தனையை செயலாக்கும் விதைகளில் ஒன்றாக அமைகிறார்
குடும்பம் ஒரு சமூக அலகு என்ற முறையில் உணர்வு பூர்வமான பிணைப்புக்கள்ää ஒரு வரலாறு மற்றும் ஓர் எதிர்காலம் என்பவற்றை பகிர்ந்து கொள்ளும் ஓர் தனி நபர்களின் குழு ஒன்றை கொண்டதாக இருந்து வருகிறது.
குடும்ப கட்டமைப்பு ஒவ்வொரு குடும்பம் தொடர்பாகவும் வேறுபட்டதாக இருந்து வர முடியும். ஆனால் குடும்பத்தின் செயற்பாடுகள் ஒரே விதமானவையாகவே உள்ளன.
குடும்பத்தின் கட்டமைப்பு வேறுபட்டதாக மாறினாலும் அது சில அடிப்படை கருமங்களை நிறைவு செய்து வருகிறது. பாதுகாப்புää உயிர் வாழ்க்கைää பிள்ளைகளை சமூக மயப்படுத்துதல்ää ஆதரவு மற்றும் போசித்து வளர்த்தல்ää பாலுறவுகளின் சட்ட பூர்வத் தன்மைää மகப்பேறுää சமூக மற்றும் பொருளாதார தாபனம் என்பன இத்தகைய கருமங்களாகும். இத்தகைய கருமங்களே செவ்வனே ஆற்றுவதற்கு குடும்பத்தின் தலைமைத்துவம் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
இந்த நினைவுப் பேருரையானது பிள்ளைகளின் கல்வி விருத்தியில் குடும்பத் தலைமைத்துவத்தின் அவசியம்ää அதன் போக்கு என்பவற்றை நோக்குவதாக உள்ளது. மீண்டும் ஒரு முறை கல்லூரியின நிறுவுனர் அமரர்.குமரையா முத்துக்குமாரு அவர்களது நினைவுப் பேருரையை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் அளித்த கல்லூரியின் தலைவர். திரு.யு.ஐ.தயானந்தராஜா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடர்கின்றேன்.
தலைமைத்துவம்
தலைமைத்துவம் என்னும் எண்ணக்கரு மனிதனது சிந்தனையை தகர்விக்கும் ஒரு கருப்பொருளாக எல்லாக் காலமும் இருந்து வந்துள்ளது. மனிதன் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தகாலம் முதல் பேசப்பட்டுவரும் தலைமைத்துவமானதுää இன்று தேசங்களை வழிநடத்தவும்ää சமூகங்களையும்ää நிறுவனங்களையும் வழிநடத்தவும் குடும்பங்களை கட்டிக் காத்திடவும் முக்கியமானதொரு எண்ணக்கருவாக நாளுக்கு நாள் எம்மிடையே விரிவடைந்து வருகின்றது.
தலைமைத்துவம் என்பதனை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம். இலக்குகளை அடைவதற்கு ஆர்வத்துடன் செயற்படக் கூடியதாக மற்றவர்களின் செல்வாக்குச் செலுத்தும் கலை அல்லது செயன் முறையை தலைமைத்துவம் எனலாம். அதாவது மனிதனின் தரிசன நோக்கள்களை உயர்மட்டத்திற்கு உயர்த்துவதற்கு தலைமைத்துவம் அவசியமாகும்..
மனிதனின் செயலாற்றுகையை உயர்தரத்தில் கொண்டு செல்வதற்கு மனிதனின் ஆளுமையை அதனுடைய சாதாரண எல்லைக்கு அப்பால் கட்டியெழுப்புவதற்கும் தலைமைத்துவத்தின் பணி இன்றியமையாதது ஆகும்.
குடும்ப தலைமைத்துவம்
குடும்ப தலைமைத்துவம் என நாம் நோக்கும் போது குடும்ப தலைமைத்துவமானது பெற்றோர்களினால் குடும்பத்தின் மீது செலுத்தப்படும் அர்த்தப்பூர்வமான ஆழ்ந்த ஈடுபாட்டினையும்ää வழிநடத்தல்களையும் குறித்து நிற்கின்றது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அனைத்து நலன்கள் தொடர்பாகவும்ää தேவைகள் செயற்பாடுகள் தொடர்பாகவும் தீர்மானமெடுத்தலையும்ää இது தொடர்பாக சரியான தொடர்புபடுத்தல்களையும்ää ஒருங்கிணைப்;புகளையும் மேற்கொண்டு பிள்ளைகளின் இலட்சியங்களை நிறைவேற்ற உதவுவதை குடும்பத் தலைமைத்துவம் எனலாம்.
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் இரு முக்கிய கருமங்கள் இருந்து வருகின்றன. அவையாவன.
1. உள்ளக கருமங்களாகும்:- அதாவது குடும்ப உறுப்பினர்களின் உளவியல் சமூக பாதுகாப்பாகும்.
2. வெளியக கருமங்களாகும்:- வெளியக கருமங்கள் எனும் போது குறிப்பிட்ட கலாசாரத்தில் இடமளித்து அந்த கலாசாரத்தை ஊடுகடத்தல். என்பதோடு குடும்ப உறுப்பினர்களின் சுய கதன்மையை விருத்தி செய்தலாகும்.
மேற் கண்ட உள்ளக கருமங்கள்ää வெளியக கருமங்கள் இரண்டிலும் குடும்ப தலைமைத்துவத்தின் அறிவுää திறன்ää மனப்பாங்கு என்பன பின்னி பிணைந்திருக்கின்றது.
“வாழ்க்கையிலான தலைமைப் பண்பு என்பது குடும்பத்தினை தலைமைப்பண்பிலிருந்து தொடங்குகின்றது. எமது வாழ்வின் நிரந்தர அர்த்தம் எமது அன்றாட வேலைகளில் எமக்கு கிடைக்கும் வெற்றிகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை அது எமது குழந்தைகளில் நலம் உருவாக்கும் நற்பண்புகளில் தங்கியுள்ளது” என குஷ்னர் என்ற சமூகவியலாளர் கூறுகின்றார்.
“எமது பிள்ளைகளில் சிறுவயதில் தென்படும் அறிகுறிகளின்படியே அவர்கள் வளர்வதற்கு எமது குடும்ப தலைமைத்துவம் உதவியாக அமைந்தால் மேதைகளைத் தவிர வேறொருவரும் நம்மிடையே இருக்க முடியாது என “கெதே” என அறிஞர் குறிப்பிடுகின்றார்.
மேற்கண்ட கூற்றுக்கள் இரண்டும் உலகிலேயே மிக உயர்ந்த தலைமைத்துவம் குடும்பத் தலைமைத்துவமே ஆகும். குடும்ப தலைமைத்துவம் சிறப்பாக அமைந்தால் மற்றையவை சிறப்பாக அமையும் என்பது எமக்கு புலப்படுத்துகின்றன.
குடும்ப தலைமைத்துவத்தின் அவசியம்
வாழ்க்கையில் தலைவனாக இருப்பதென்பது இல்லத்தில் தலைவனாக இருப்பதிலிருந்து தொடங்குகின்றது. தலைமைத்துவம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் அடிப்படையானது. குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய மனக்காட்சியொன்றை உருவாக்கிää அம்மனக்காட்சியை நோக்கி குடும்ப உறுப்பினர்களை இயக்குவதற்கு குடும்ப தலைமைத்துவம் அவசியமானது. குடும்ப தலைமைத்துவமானது குடும்ப அங்கத்தவர்களின் ஒத்துழைப்பினைப் ப10ரணமாகப் பெற்று குடும்ப அங்கத்தவர்களின் இணக்கத்துடன் குடும்பவிருத்திக்கான செயற்பாடுகளில்; பங்கேற்றுச் செயற்பட ää குடும்ப அங்கத்தவர்களை வழிநடத்தும் பொறுப்புடையது.
ஓர் தனியாளின் தலைமைத்துவத்திற்குரிய உள் ஆற்றலானது சிக்கலான உயிரியல்ää சமூக மற்றும் உளவியல் செயல்முறைகளின் கூட்டினால் நிர்ணயிக்கப்படுகின்றது. இவ்வுள் ஆற்றலை நல்லமுறையில் செயற்படுத்தினால் மாத்திரமே அது பயனுள்ளதாக மாறும். ஒருவர் தலைமைத்துவப் பண்புகளைத் தம்முள் கொண்டிருந்த போதிலும் அதனைச் செயற்படுத்தாதவராக இருக்கலாம். பல்வேறு சந்தாப்பங்களில் இப்பண்புகள் வெளிப்படக்கூடும். சூழலும் அதுவழங்கும் வாய்ப்புக்கள் வரையறைகள் என்பவையும் தலைமைத்துவத்தைச் செயற்படுத்தலதில் செல்வாக்குச் செலுத்த கூடியனவாகும்.
குடும்ப அங்கத்தவர்களின் விருத்தி தொடர்பாக மிக அக்கறையுடனும்ää ஆர்வத்துடனும் செயற்படுவதற்கு குடும்ப தலைமைத்துவத்தை விட வேறு யாரும் சிறப்பாக முன்வர முடியாது. பல்வேறு சவால்கள் தடைகள்ää துன்பங்கள் வந்த போதிலும் செழுமையான வாய்ப்புகளும் வசதிகளும் கிடைத்த போதிலும் எவ்லாவற்றையும் எதிர்நோக்கி சிறப்பான இல்டசியத்தின்பால் குடுமபத்தினை வழிநடத்துவதற்க ஆற்றல்மிகு குடும்ப தலைமைத்துவம் அவசியமானதாகும்.
மேலும் குடும்ப தலைமைத்துவமானது பொதுவாக பின.வரும் காரணங்களுக்காக அவசியம் எனலாம்.
• குடும்பத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவதற்கும் ää மாற்றங்களை குடும்ப அங்கத்தவர்கள் மகிழ்ச்சியாகவும் அர்த்தப10ர்வமாக ஏற்றுக் கொள்வதற்கும்.
உதவுதல்
• குடும்ப அங்கத்தவர்களிடையே ஆரோக்கியமான உடல் உள நிலையை பேணுவதற்கு பாடுபடல்
• பிள்ளைகளின் அறிவாற்றல் திறன்களை ஊக்கவிப்பதற்கும் அவர்களது கல்வி நிலையை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டல்.
• வெற்றிகரமானதும் ஆரோக்கியமானதுமான குடும்பச் சூழலை உருவாக்கி அதனை பேணிக்காப்பதற்கு முன்நிற்றல்.
• நிலைத்திருக்கவல்லதும்ää சிறப்பானதுமான குடும்ப பொருளாதார நிலையை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக திகழுதல்.
• பண்பார்ந்த கலாசாரம்ää ஆன்மீக ஈடுபாடு ää ஒற்றுமையுணர்வு பரஸ்பர ஒத்துழைப்புமிக்க குடும்ப கவின்நிலையை உருவாக்கி பேணுதல்.
• குடுமபத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
• குடும்பத்தை சமூகத்துடன் இணைத்து வழிநடத்துவதற்கும் சமூக நல்லியல்புகளை ஊடுகடத்துவதற்கும் பாலமாக அமைதல்
• குடும்ப அங்கத்தவர்கள் ஒருவரின் வளர்ச்சியில் ஒருவர் பங்கேற்று உதவும் ஆரோக்கிய நல்லுறவை விருத்தியாக்குவதற்குமான தொடர்பகளை உருவாக்குதல்.
• அடுத்த சந்ததியினரை உருவாக்குவதற்கான தொடர்பாடலையும்ää வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
என்பனவாகும்.
குடும்ப தலைமைத்துவத்தின் இலக்குகள்
குடும்ப தலைமைத்துவமமானது பின்வரும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்விலக்குகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி பிணைப்புடையதாகும். இவ்விலக்குகள் சமச்சீராய் இருக்க வேண்டும் . இவ்விலக்குகளில் ஒன்று சரிவுற்றாலும் குடும்ப தலைமைத்துவம் பிரச்சினைகளை எதிர்;கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப தலைமைத்துவத்தின் இலக்குகள் பின்வருமாறு அமைகின்றன.
1. குடும்பம் - நாம் வாழ்வது பிழைப்பை நடத்துவது நம்முடைய அன்பைப் பெற்றவர்களுக்குhகத்தான்.
2. பொருளாதார நிலை -நமது வேலைகளையும் பணத்தால் வாங்க முடிந்த பொருள்களையும் குறிக்கும்.
3. உடல்நிலை -நமக்கு உடல் நலம் இல்லையென்றால் எதற்குமே பொருளில்லை.
4. மனநிலை -அறிவையும் ஞானத்தையும் பிரதிபலிக்கிறது.
5. சமுதாய நிலை- ஒவ்வொருவருக்கும் நிறுவனத்திற்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. அது இல்லாவிட்டால் சமுதாயம் மெல்லச் சாகத் தொடங்கிவிடும்.
6. ஆன்ம நிலை- நமது பண்பு அமைப்பு நெறியையும் நடத்தையையும் பிரதிபலிக்கிறது.
குடும்ப தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டிய பண்புகள்.
குடும்ப தலைமைத்துவமானது குடும்ப கட்டமைப்பினையும்ää குடும்பத்தின் இயங்குநிலையினையும் ஒன்று சேர நிர்வகிக்கும் பொறுப்பினையும் கடமையினையும் கொண்டதாகும். அதாவது குடும்ப தலைமைத்துவமானது தான் குடும்பம் எனற் அலகிற்கு சொந்தமானவர் என்ற உணர்வினையும்ää தான் குடுமபத்தின் தனித்த ஒரு கூறாக உள்ளேன் என்ற உணர்வினையும் ஒன்று சேர்த்த உணர்வக்கலவையுடன் தன்னை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.இதற்காக குடும்ப தலைமைத்துவமானது பின்வரும் பண்பகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியுள்ளது அவையாவன.
• குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்ச்சியாக உரையாட விருப்பம் கொண்டிருத்தல்.
• குடும்ப அங்கத்தவர்களை பாராட்டவும் விமர்சிக்கவும் தயாராக இருத்தல்
• சிறப்பான முன்மாதிரியாக திகழுதல்
• பொறுப்புணர்வும் சுதந்திரமும் உள்ளவராக இருத்தல்
• சுயக் கட்டுப்பாட்டுடனும் ஒத்துணர்வுடனும் இருத்தல்
• உண்மை தன்மையுடன் நடந்துக் கொள்ளல்
• குடுமபத்தின் சகல விடயங்களிலும் அக்கறையை வெளிக்காட்டுதல்
• உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனஞ் செலுத்துதல்.
• குடும்ப இரகசியங்களைப் பாதுகாத்தல்
• குடும்ப நன்மைக்காக அயராது உழைத்தல்
• சிறந்த ஒழுக்க விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்தல்
• அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புதல்
• சவால்களை ஏற்றுக் கொள்ளல்
• குடும்ப தேவைகளைப் ப10ர்த்தி செய்ய தயாராக இருத்தல்.
• உடன்பாடான மனப்பாங்குடன் எதனையும் நோக்குதல்
• வெறித்தனமான நேர்மையுடன் இருத்தல்.
• மனித நம்பிக்கையை வளர்ப்பவராக இருத்தல்
என்பனவாகும்
குடும்ப தலைமைத்துவத்தின் நடையியல்கள்.
குடும்ப தலைமைத்துவம் பற்றி நோக்கும் போது குடும்ப தலைமைத்துவத்தின் நடையியல்கள் பின்வருமாறு அமைகின்றது. அவையாவன
1.அதிகாரமுள்ள குடும்ப தலைமைத்துவம்
அதிகாரமுள்ள குடும்ப தலைமைத்துவமானது குடும்ப உறுப்பினர்கள் மீது; அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டதாகவும்ää கடுமையான சட்டவிதிகளால் குடும்ப உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துதாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான எல்லா முடிவுகளையும் குடும்ப தலைவரே எடுப்பார். குடும்ப தலைமைத்துவத்திற்கும் குடும்ப உறுப்பினர்களக்கும் இடையிலான தொடர்பாடல் இங்கு குறைவாகவே காணப்படும். இத்தகைய குடும்ப தலைமைத்துவம் குடும்பத்தில் வெளிப்படையான நிலையை தோற்றுவிக்கமாட்டாது. மாறாக குடுமபத்தில் கட்டுப்பாடான நிலை காணப்பட்டாலும் அங்கு மகிழ்ச்சி குறைவாகவே காணப்படும்
2.அதரவளிக்கும் குடும்ப தலைமைத்துவம்
ஆதரவளிக்கின்ற குடும்ப தலைமைத்துவம் குடும்ப உறுப்பினர்களின் நண்பர்கள் போன்று நடந்துக் கொள்ளும். குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடுகளில் இவர்களது பங்குபற்றுதல் தவறாது இருக்கும். சினேகப10ர்வமான உறவாடல் அங்கு காணப்படும். இங்கு கவனமாக செவிமடுத்தல்ää சனநாயகமுள்ள தொடர்பாடல் ää கலந்தரையாடல் மூலமாக தீhமானமெடுத்தல்ää தலைமைத்துவத்திற்கு கட்டுபடல்.போன்ற நல்லம்சங்கள் அதிகமாக காணப்படும்.
3.தயவு காட்டுகின்ற குடும்ப தலைமைத்துவம்
தயுவுகாட்டுகின்ற குடும்ப தலைமைத்துவம் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு அதிக முன்னூரிமை
வழங்கும்;. கிட்டத்தட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அடங்கி நடக்கின்ற தலைவராக இருப்பார்கள். இங்கு குடும்ப உறுப்பினர்களின சில பொருத்தமற்ற நடத்தைகள் கூட குடும்ப தலைமையினால் விரும்பி ஏற்கப்படும் அபாயம் காணப்படும்.
4.தலையிடாத குடும்ப தலைமைத்துவம்
தலையிடாத குடும்ப தலைமைத்துவம் பெரும்பாலும் தமது தேவைகளை முன்னிறுத்தி குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் ää குடும்ப உறுப்பினர்களின் விருத்தி என்பவற்றை கவனத்தில் எடுக்காமல்
இருக்கும்;.இந்நிலைமை குடும்ப உறுப்பினர்களின விருத்தியில் பாரிய எதிர் தாக்கங்களை
உருவாக்கும்.
பிள்ளைகளின் கல்வி விருத்தியில் குடும்ப தலைமைத்துவத்தின் பங்களிப்பு
உன்; குழந்தைகளுக்கு நீ கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த அனபளிப்பு என்னவென்றால் அது நீ அவர்களுக்கு ஒதுக்கும் நேரம்தான் எனபதை ஒரு போதும் மறவாதே
உனது குழந்தைகள் எந்தவகையில் சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டுமென்று நீ கனவு காண்கின்றாயோ அந்தவகையில் சிறந்த மனிதர்களாக உருவாகக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு நீ அளிப்பதற்கான சிறந்த வழி அதேவிதமான சிறந்த மனிதராக உன்னை நீயே உருவாக்கிக் கொண்டு விடுவதுதான்.
ஊன் குழந்தைகளுக்கு தினமும் நீ அளிக்கப்போகும் பரிசு நீ ஒருநல்ல முன்னுதாரணமாக இருப்பதுதான்
நீ வாழ்க்கையில் எதன்மீது கவனமாய் இருக்கின்றாயோ அது வளரும் எதைப்பற்றி சிந்திக்கின்றாயோ அது விரிவடையும்.எதன் மீதெல்லாம் நீ கவனம் செலுத்துகின்றாயோ அவையெல்லாம் முக்கியமாவையாகிவிடும்.
பேற்றோராக இருப்பது எனபது தலைவனாக இருப்பதுதான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்.ஒருநிர்வாகத்தின் மிக முக்கிய அதிகரிக்கு மட்மு; தலைவனாக இருக்கும் தகுதிமட்டும் உண்டு என்பது கிடையாது.நிhவாகத்தின் கூட்டம் நடத்தும் இது போன்ற அறையிலும் சரி அல்லது முழுநேர பெற்றோராக உனது இல்லத்தில் இருந்தாலும் சரி நீ ஒரு தலைவன்.
நல்ல பெற்றோர்கள் சிறந்த தோல்விகளுக்கும் பரிசளிப்பர்.
பெற்றோராக நீ செய்ய வேண்டிய தலையாய கடமை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment