Saturday, August 24, 2013
team work and teachers
ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றுதல்-அணி நுட்பங்கள் சிறப்பு நோக்கு.
க.சுவர்ணராஜா
அறிமுகம்.
இணைந்து பணியாற்றுதல் என்பது ஒன்றுக்கு மேற்பட்டோர் ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக ஒண்றிணைந்து பணியாற்றுதலைக் குறிப்பதாகும். செயற்றிட்டங்கள்ää குழு வேலைகள் ää சிறப்புச் செயலணியாக இயங்குதல்ää அணியாக நின்று செயற்படல் என்பவற்றை இணைந்து பணியாற்றுதல் எனலாம்.
இணைந்து பணியாற்றுதல் என்பது சமூக நிறுவனங்களினதும்ää கல்விச் செயற்பாடுகளினதும் வெற்றிக்கு மிக முக்கியமாதாகும். இக்கட்டுரையானது பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி விருத்திக்காகääசுய வாண்மைவிருத்திக்காக இணைந்து பணியாற்றுதல் என்பதில் அணியாக நின்று செயற்படுதல் பற்றி நோக்குகின்றது.
அணியாக செயற்படல் என்பது ஒருங்கிசைந்த ஓர் அலகாக மனிதாகள் ஒருவரோடொருவர் இணைந்து செயற்படும ஒரு முறையாகும். அணிகளை அமைத்து செயற்படுவதில் சிறப்பானதொரு தலைமைத்துவம் அவசியமாகும். அணியாக இணைந்து செயற்படுவதால் செயற்பாடுகளின் வினைத்திறன் அதிகரிக்கின்றது.
அணி என்பது தரம் வாய்ந்த ஒரு குழுவாகும். பல்வேறு நிறுவனங்கள் பாடசாலைகள் குறிப்பான அணிகளை உருவாக்கி தமது நிறுவனத்தின் இயக்கத்தினை சீர்ப்படுத்துகின்றன. அணிகள் மூலமான நிறுவனச் செயற்பாடுகள் தரம் வாய்ந்தவையாகவும் நிறுவன உறுப்பினர்களிடையே அக ஊக்குவிப்பை விருத்தியாக்கி தரமான வெளியீட்டினை தருவதற்கு அடித்தளமிடுகின்றன. தரமான நிறுவனஞ் சுற்றாடலை உருவாக்குவதற்கு அணிகள் மூலமான நெறிப்படுத்துகை உதவுகின்றது.
அணிகள் நிறுவனமொன்றின் மாற்றத்திற்கான இதயமாக விளங்குகின்றன. வினைத்திறன்மிகு அணிகள் நிறுவனத்தின் அதிசக்தி வாய்ந்த இயக்கத்திற்கான குணவியல்புகளைக் கொண்டிருக்கின்றன.
அணிகள் தனியாட்களிடம் காணப்படும் ஆற்றல்கள்ää திறன்கள்ää சக்திää அனுபவம்ää பெறுமானங்கள் தீர்ப்புக்கள் என்பவற்றை ஒன்று திரட்டி நிறுவனத்தின் இலக்கினை முனைப்புடன் அடைய உதவுகின்றன. அத்துடன் நெகிழ்ச்சியான முறையிலும்ää உற்பத்திதிறன் சார்ந்த வகையிலும் தனிமனித செயலாற்றல்களை ஒருங்குவிப்பதில் அணிகளின் தேவை இன்றியமையாதாதகும்.
ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றுதலில் எழும் நன்மைகள்
ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றுதலில் எழும் நன்மைகள் பின்வருமாறு அமைகின்றன.அவையாவன.
1.வாண்மைத்துவ விருத்தி
2.சிக்கனமான செயற்படல்:பொருளாதார நன்மைகள் அதிகரித்தல்
3.வினைத்திறன்மிகு வேலை முறைமை உருவாகுதல்
4.சிறந்த வேலையனுபவங்களைப் பகிர்தல்
5.நெருக்கமான புரிந்துணர்வுடன் கூடிய தொடர்பாடல்.
6.நவீனமான சமூகம் உருவாகுதல்
7.பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல்.
8.இணைந்த தந்திரோபாயங்கள் உருவாகுதல்
9.ஒன்றை திரும்ப திரும்பச் செய்தலை தவிர்;தல்
10.ஆக்கதிறன் விருத்தி
11.நேரத்தைääநிதியை சேமித்தல்
என்பனவாகும்
பாடசாலைகளைப் பொறுத்த வரையில் பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து பணியாற்றுவதற்கு அணிமுறைமை மிகவும் பயனுடையது. எனினும் பாடசாலைகளில் காணப்படும் பின்வரும் இயல்புகள் ஆசிரியர்கள் அணியாக இயங்குவதற்கு தடையாக உள்ளது.
1.பாடசாலைகளின் சீரற்ற ஒழுங்கமைப்பு.
பாடசாலைகளின் சீரற்ற ஒழுங்கமைப்பு ஆசிரியர்கள் அணியாக இயங்குவதற்கு தடையாக உள்ளன. அதிபர்ää உப அதிபர்ää பிரதி அதிபர் என்றவாறு காணப்படும் ஒழுங்கமைப்பில் உள்ள அங்கத்தவர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மைää பாடசாலை தொலைநோக்கு பற்றிய வேறுபட்ட கண்ணேட்டங்கள் என்பன ஆசிரியர்கள் ஆக்கப்ப10ர்வமான அணியாக செயற்படுவதை தடுக்கின்றன. அத்துடன் ஆசிரியர்களிடையே பொருத்தமான தொடர்பு கோலங்களை கட்டியெழுப்பவும் தவறுகின்றன. இதனால் ஆசிரியாகள் அணியாக இயங்குதல் இல்லாதுபோதல் அல்லது வினைதிறன்மிகு அணியாக இயங்கமுடியாமை போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
2.ஆசிரியர்கள் பாட நிபுணத்துவத்தோடு தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளல்.
ஆசிரியர்கள் பாட நிபுணத்துவத்தோடு தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளல்ää தனித்த வகைக்கூறலைக் கொண்டுள்ளமை என்பனவும் ஆசிரியர்கள் பாடசாலையில் அணியாக நின்ற செயற்படுவதில் குறைவினை ஏற்படுத்துகின்றது. ஆசிரியர்களின் வகைக்கூறலானது பெருமளவில் மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பானதாக இருப்பதால் அவர்கள் தனது பாடங்களை தனித்து நின்று கற்பிப்பதில் காட்டும் அக்கறையை வேறுச் செயற்பாடுகள் இணைந்து பணியாற்றும் விடயங்கள் எனபவற்றில் காட்ட முன்வருவதில்லை. பெரும்பாலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்ää நிர்வாக விடயங்கள்ää விசேட செயற்றிட்டங்கள் என்பவற்றில் அணியாக பங்கேற்கும் ஆசிரிய நடத்தைகள் மட்டுப்பாடாகவே உள்ளன.
3.பாடசாலை தவிர்ந்த நாட்களில் ஆசிரியர்கள் பாடசாலையுடன் கொண்டுள்ள தொடர்பு
குறைவானதாக உள்ளமை.
பாடசாலைகளின் விடுமுறைகளின் போது ஆசிரியர்களில் பெரும்பாலானோர்
பாடசாலையுடன் தொடர்பற்ற நிலையிலேயே உள்ளனர். இதனால் பாடசாலை நடைபெறும் காலங்களில் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்கள் அற்றுப் போகக் கூடிய நிலை உருவாகுகின்றதுää அல்லது செயற்றிட்டங்களில் பங்கெடுத்த சில ஆசிரியர்கள் மட்டும் சமூகந்தந்து செயற்றிட்டங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சேர்ந்து இயங்குதல் தொடர்பாக கசப்பான அனுபவங்களே கிடைப்பதால் அணியாக இயங்குவதில் நம்பிக்கை இழக்கின்றனர்.
அணி உணர்வு என்பது அறிவு நேர்மை அர்ப்பணிப்பு தியாகம் புரிந்துணர்வு என்பவற்றோடு தொடர்ச்சியான தன்மையையும் பேணுவதாக அமைய வேண்டும்.
4.ஆசிரியர்கள் வெளிக்காட்டும் தனித்த போக்கு
ஆசிரியர்கள் சிலர் தமது திறமைகளை தம்மளவில் மட்டும் வைத்துக் கொள்பவர்களாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களாகவும் உள்ளனர். மற்றவர்களுடன் சேர்ந்து இயங்குதல் தங்களது தனித்துவத்தைப் பாதிக்கும் என்ற மனநிலையில் செயற்படும் ஆசிரியர்கள் ஏனையோர் அணியாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர்.சில ஆசிரியர்கள் தான் வினைத்திறனுடன் இயங்கமுடியாத நிலையில் தலைமைத்துவம் மற்றும் செயற்பாட்டு அணிகளின் மீது குறைகாண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதுடன்ää செயற்பாட்டு அணிகளை விமர்சிப்பதிலும்ää அணிகளை பிரிப்பதிலும் காட்டும் தீவிர நிலையும் அணிகளாக ஆசிரியர்கள் இயங்குவதற்கு தடைகளாக உள்ளன.
எந்த ஒரு நபரும் பரிப10ரணமாவரல்லர். ஒவ்வொருவரிடமும் பலங்களும் பலவீனங்களும் கலந்துக் காணப்படுகின்றன. அணி முறையில் ஆசிரியர்கள் இயங்குவது பலமான விடயங்களை கவனத்திற் கொள்வதாகவும் பலவீனமான விடயங்களை ஒதுக்கிவைப்பதாகவும் அமைகின்றது.அணிமுறையின் இத்தகைய போக்கு தனிநபர் கூட்டு வலிமைகளுக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்று தருவதாக அமைகின்றது.
5.பகிர்தளிக்கப்படாத பொறுப்புக்கள்.
பாடசாலைகளில் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படாத நிலை அல்லது ஒரு சிலரிடம் மட்டும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலை ஆசிரியர்கள் அணியாக இயங்குவதற்கு தடையாக உள்ளன. பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதில் காணப்படும் குறைபாடுகள் ஆசிரியர்களின் சேர்ந்து இயங்குதலில் சோர்வினை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.
எம்மோடு ஒருவர் நூறு வீதம் இணங்கிப் போனால் மட்டுமே அவரோடு சேர்ந்து பணியாற்ற முடியும் என்ற தவறான உணர்வு ஊடுருவிக் காணப்படுவதால் அணிரீதியான வேலைகள் பெரிதும் தடைப்படுகின்றன. எவரும் முழுமையான அளவில் ஒத்துழைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. பாடசாலைகளின் பெரும்பாலான குழு வேலைகளில் தனியொருவர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு தனது சிந்தனைமுறையையும் அணுகுமுறையையும் குழுவின்மீது திணித்துக் கொண்டிருக்கும் நிலை அதாவது தனிநபர் முகாமைக்கு பாடசாலையின் செயற்பாடுகள் பலியாகிக் கொண்டிருப்பது அணிரீதியான ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் அணியாக இணைந்து செயற்படுவதினால் எழும் வாண்மைத்துவ விருத்தி அம்சங்கள்.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் அணியாக இணைந்து செயற்படுவதினால் பின்வரும் வாண்மைத்துவ விருத்தி அம்சங்கள் உருவாகுகின்றன அவையாவன.
1.ஆசிரியர்களுக்கிடையிலான நட்புறவு அதிகரிக்கின்றது.
2.ஆசிரியர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பரஸ்பரம்
கலந்துரையாடுவதற்கான சூழல் இயலபாகவே கட்டியெழுப்படுகின்றது.
3.ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் பற்றிய தெளிவான விளக்கத்தைப் பெறவும்ää
பிரச்சினைகளிலிருந்து மீளவும் ஒருவொருக்கொருவர் உதவும் நிலை உருவாகுகின்றது.
4.ஆசிரியர்கள் அணியாக செயற்படும்போது ஒருவொருக்கொருவர் முன்மாதிரியாக திகழ
முடிகின்றது.
5.பெரும்பாலான கற்றல்கள் ஒன்றிணைதல் மூலமே நிகழ்வதால் அணியாக இயங்குவதன்
மூலம் ஆசிரியர்கள் நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எற்படுகின்றது.
6.அணியாக இயங்கும்போது ஆசிரியர்களிடையே சமூக உறவுகள் பலமடைகின்றன.சமூக
உறவுகள் பலமடையும் போது தலைமைத்துவ ஆற்றல்கள் வழிகாட்டும்
ஆற்றல்கள்ääபின்பற்றும் மனப்பக்குவம்ää என்பன செம்மையாக விருத்தியடைகின்றன.
7.ஆசிரியர்கள் கறற்ல்-கற்பித்தல் செயற்பாடுகளை அணிமுறையில் திட்டமிட்டு
செயற்படுத்தவதால் துறைசார்பான ஆற்றலகள் ஒன்றுதிரன்டு ஆக்கம்ää புத்தாக்கம்
என்பன அடங்கிய வினைத்திறன்மிகு கற்றல் கலாசாரம் உருவாகுகின்றது.
8.ஆசிரியர்கள் தனித்து தமது புலக்காட்சியுடன் மட்டும் மட்டுப்பட்டிருப்பதைவிட ஏனைய
ஆசிரியர்களின் புலக்காட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படல்ää அதாவது ஏனைய
ஆசிரியர்களின் இதய உணர்வுகளுடனும்ää சிந்தனைகளுடனும் கலந்துச் செயற்படல்
யதார்த்த நிலையினை நன்கு விளங்கிக் கொள்ள உதவும். சுய அனுபவங்களை
ஏனையோரின் அனுபவங்களோடு கலக்கும் போது வெளிப்படும் பெறுபேறுகள்
உயர்வானதாக அமையும்.
9.ஆசிரியர்கள அணியாகசெயற்படுதல் அவர்களிடம் கற்கும்;
மாணவர்களிடையேää ஒன்றிணைந்து பணியாற்றும் மனப்பாங்கினை உருவாக்குகின்றது.
ஓர் அணியில் ஒரு உறுப்பினராக செயற்படல்.
ஓர் அணியில் ஆசிரியர்கள் ஒரு உறுப்பினராக செயற்படுவதற்கு பின்வரும் பண்புகளை தன்னகத்தே வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.அவையாவன
1.தகவல்களை பரிமாறுவதற்காக அணி உறுப்பினர்களிடையே சுயாதீனமான திறந்த
தொடர்பாடலை மேற்கொள்ளல்.
2.அணியின் இலக்கினை நிறைவேற்றுவதற்கான ஆக்கப்ப10ர்வமான பங்களிப்பினை
வழங்குதல்.
3.அணியில் தீர்மானமெடுக்கும் செயற்பாடுகளில் உங்களது ஆலோசனைகளை தயங்காது
முன்வைத்தல்.
4.அணியில் தீர்மானமெடுத்தலுக்காக ஒத்துழைத்தல்
5.அணியினால் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியினை உரிய காலத்தில்
நிறைவேற்றுதல்.
6.அணியின் இலக்கை அடைவதற்காக உங்களது நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கிக்
கொள்ளல்.
7.அணியின் புதிய அங்கத்தவர்களை விருப்புடன் வரவேற்றல்.உங்களை ஆர்வத்துடன்
அறிமுகப்படுத்திக் கொள்ளல்.
8.அணியின் அங்கத்தவர்களுக்கு உங்களது ஒழுங்குமுறையான செயற்பாடுகளின் ஊடாக
முன்மாதியாக திகழுதல்.
9.அணியின் செயற்பாடுகளின் போது வெளிப்படும் உங்களது பலம் பலவீனங்கள்
தொடர்ச்சியாக கவனஞ் செலுத்துதல்.
10.அணி அங்கத்தவர்களின் செயற்பாடுகள் தொடாபாக ஆக்கப்ப10ர்வமாக கருத்து
தெரிவித்தல்.
11.வினாக்கள் தொடுத்தல்ää கலந்துரையாடுதல் மூலம் அணியின் செயற்பாடுகள் பற்றிய
சந்தேகங்களை தெளிவாக்கிக் கொள்ளலாம்.
12.அணி அங்கத்தவர்களின் கருத்துக்களை உன்னிப்பாக செவிமடுத்தல்
13.அணி அங்கத்தவர்களின் பின்னூட்டல்கள் ஆலோசனைகள் என்பவை பற்றி கவனஞ்
செலுத்துதல்.
14.அணி அங்கத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்.
15.அணி அங்கத்தவர்களின் தேவைகள் பற்றி கவனஞ் செலுத்துதல்
16.அணி அங்கத்தவர்களுடன் இணைந்து மதிப்பிடல் ஈடுபடல்.
என்பனவாகும்.
ஓர் அணியில் சுயாதீனமாக இயங்குதல்.
ஓர் அணியில் சுயாதீனமாக இயங்குதவதன் ஊடாகவே தன்னாலான பங்களிப்பினை அணியின் வெற்றிக்காக ஆசிரியர்கள் வழங்கமுடியும். சுயாதீனமாக இயங்குதல் என்பது பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்.அவையாவன
1.நாளாந்த செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதோடு
தினமும் ஆற்றிய செயற்பாடுகள் தொடர்பாக சுயமதிப்பிட்டில் ஈடுபடல்.
2.நாளாந்த செயற்பாடுகளை முன்னுரிமை அமுலாக்குதல்.
3.பெரிய வேலைகளை சிறு சிறு கூறுகளாக்கி முகாமைத்துவஞ் செய்தல்.
4.செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய இடையுறுகளை அறிந்து அவற்றை இழிவாக்கிக்
கொள்ளல்.
5.நேரத்தை பொருத்தமாக முகாமைத்துவஞ் செய்தல்.
6.தொடர்ச்சியாக செயற்பாடுகளை மீளாய்வு செய்தல்.
7.செய்து முடிக்கவேண்டிய செயற்பாடுகள்ääசெய்து முடிக்க தவறிய விடயங்கள் தொடர்பாக
உரிய கால அட்டவணையை தயாரித்து செயற்படல்.
8.ஆற்றிய பணிகள் தொடர்பாக நாளந்தம் சம்பவ திரட்டு எழுதுதல்
9.செயற்பாட்டு அறிக்கைகளை உரிய காலத்தில் தயாரித்தல்
10.செயற்பாடுகளின் தரம்ääபொருத்தப்பாடு தொடாபாக சகபாடிகளின் கருத்தை கேட்டறிதல்.
11.தேவையான செயலமர்வுகள்ääகலந்துரையாடல்கள்ääதவறாது பங்குக்கொள்ளல்.
12.செயற்பாடுகள் தொடர்பாக உதவிகள் தேவைப்படுமிடத்து சகபாடிகளிடம் தயங்காத
கேட்டல். ஏன்பனவாகும்
தலைமைத்துவ வகிப்பங்கு ஏற்றுச் செயற்படல்.
ஆசிரியர்கள் தாம்சார்ந்த அணிச் செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக உயரிய கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
1.அணியின் இலக்குகளை தெளிவாக அங்கத்தவர்களுடன் இணைந்து வரையறுத்தல்.
2.அணி அங்கத்தவர்களுக்கான வகிப்பாங்குகளையும்ääபொறுப்புக்களையும் தீர்மானித்தல்.
3.அணியின் இலக்குகளை அங்கத்தவர்கள் விருப்புடன் ஏற்பதையும்ääதெளிவாக விளங்கிக்
கொண்டதையும் உறுதிப்படுத்திக் கொள்ளல்.
4.அணியின் கூட்டங்களில் அணியின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக
கலந்துரையாடல்.
5.அணியின் கூட்டங்களில் ஒவ்வொரு அங்கத்தவர்களினதும் செயற்பாட்டு முன்னேற்றம்
தொடர்பாக புதிதுபடுத்தல்.
6.உங்களது அனுபவம்ääஆலோசனைகள்ää புதியவிடயங்கள் பற்றி அஙகத்தவர்களுடன்
பகிர்ந்துக் கொள்ளல் மூலம் அவர்களது செயற்பாடுகளுக்கு உதவுதல்
7.நல்ல நடத்தைகள். தரமான செயற்பாடுகள் மூலம் அங்கத்தவர்களுக்கு முன்மாதிரியாக
திகழுதல்.
8.உங்களது செயற்பாடுகள் பொருத்தமானவையென அங்கத்தவர்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு செயற்படல்.
9.அங்கத்தவாகளின் செயற்பாடுகளுக்கு படிப்படியாக பின்னூட்டல் வழங்குதல்.
10.அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஊக்குவித்தல்.
11.அங்கத்தவர்கள் ஒவ்வொருவரையும் தீர்மெடுத்தலில் பங்குக் கொள்ளச் செய்வதுடன்ää
திறந்த மனதுடன் அவர்கள் தமது கருத்துக்களைக் தெரிவிக்க ஆர்வமூட்டல்.
12.அங்கத்தவர்களின் கருத்துக்களை முதற்தடவையிலேயே நிராகரிக்க வேண்டாம்.
13.அங்கத்தவர்கள் அணியின் செயற்பாட பற்றிய விளக்கமில்லாத போது போதிய
நேரமெடுத்து அவர்களுக்கு விளக்குதல்.
14.அணியின் செயற்பாடுகளில் தீவிரமாக இருப்பதுடன்.பொருத்தமான கவின்நிலையையும்
உருவாக்குதல்.
15.அணியின் செயற்பாடுகளை உடன்பாடான மனப்பாங்குடன் நோக்குதல்.
என்பனவாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment